சுதந்திர இந்தியாவில் மணிப்பூரில் நிகழும் சம்பவங்கள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், காட்டுமிராண்டித் தனமாக இருப்பதாகவும் மத்தியில் மற்றும் மணிப்பூரில் ஆளும் பாஜகவை திரிணமூல் காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.
மணிப்பூர் வன்முறையை மத்திய, மாநில பாஜக அரசு கையாளும் விதத்தையும் திரிணமூல் கடுமையாக கண்டித்துள்ளது. மணிப்பூரில் குகி இனப் பெண்கள் இருவரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடியோ இணையத்தில் வைரலாகி நாடு முழும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து திரிணமூல் ஆளும் பாஜக அரசை கடுமையாக சாடியுள்ளது.
இதையும் படிக்க: மகாராஷ்டிரத்தை புரட்டிப்போட்ட கனமழை: 2,200 பேர் வெளியேற்றம்!
மணிப்பூர் வன்முறை தொடர்பாக திரிணமூல் சார்பில் கூறியதாவது: கலவரத்தால் பற்றி எரியும் மணிப்பூருக்கு பிரதமர் செல்லாமல் இருக்க காரணம் என்ன? பிரதமரை மணிப்பூருக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்துவது எது? வெட்கமற்ற பாஜக! வெட்கமற்ற மணிப்பூர் மாநில அரசு. மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் இப்போது எங்கு சென்றன? இதற்கெல்லாம் மக்கள் தேர்தலில் சரியான பதிலை பாஜகவுக்கு அளிப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, மணிப்பூரில் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என பிரதமர் நரேந்திர மோடி பேசியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.