இந்தியா

திருச்சியில் சிவாஜி சிலையை திறக்காவிட்டால் அக். 1-இல் போராட்டம்

திருச்சியில் அமைக்கப்பட்டு 10 ஆண்டுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையைத் திறக்காவிட்டால் அக்டோபர் 1 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என சிவாஜி ரசிகர்கள் தெரிவித்தனர்.

DIN

தஞ்சாவூர்: திருச்சியில் அமைக்கப்பட்டு 10 ஆண்டுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையைத் திறக்காவிட்டால் அக்டோபர் 1 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என சிவாஜி ரசிகர்கள் தெரிவித்தனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாளையொட்டி, தஞ்சாவூர் மணிமண்டபம் அருகேயுள்ள சிவாஜி சிலைக்கு அவரது ரசிகர்கள் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அப்போது, சோழ மண்டல சிவாஜி பாசறைத் தலைவர் சதா. வெங்கட்ராமன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜி சிலை 13 ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்டுள்ளது. அதை தமிழக அரசு திறந்து வைக்க வேண்டும் என்பதே அகில உலக சிவாஜி ரசிகர்களின் வேண்டுகோள்.

திருச்சியில் சிவாஜிக்கு சிலை வைக்க வேண்டும் என நாங்கள் யாரும் கேட்கவில்லை என்றாலும் அமைச்சர் கே.என். நேரு தாமாகவே முன்வந்து முழு மனதுடன் சிவாஜிக்கு சிலை வைத்ததை வரவேற்கிறோம். 

இந்த சிலையை திறக்கக் கோரி அமைச்சர் நேருவிடம் கடந்த வாரம் முறையிட்டோம். அவரும் ஒரு மாதத்தில் செய்து தருவதாக உறுதி அளித்தார். அவ்வாறு செய்யாத பட்சத்தில் அமைச்சரின் இல்லத்தை சிவாஜி கணேசனின் 96 ஆவது பிறந்த நாளான அக்டோபர் 1 ஆம் தேதி முற்றுகையிட உள்ளோம். இப்போராட்டத்தைத் தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாஜி ரசிகர்களும் ஒன்று திரண்டு மேற்கொள்ளவுள்ளோம் என்று வெங்கட்ராமன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

ரஷியாவுக்கே இந்த நிலையா? எரிபொருள் தட்டுப்பாடு!

மணிப்பூரில் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும்: காங்கிரஸ்

அமெரிக்கா வரி விதிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்-துரை.வைகோ

3 வெண்கலப் பதக்கங்களுடன் நிறைவு செய்த மனு பாக்கர்!

SCROLL FOR NEXT