முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் கனமழை: மீட்புப் பணியில் தொய்வு!

மகாராஷ்டிரத்தின் கலப்பூர் தாலுகாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 16 பேர் பலியாகியுள்ள நிலையில் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

Updated On : 21 ஜூலை, 2023 at 1:38 PM
பகிர்:

மகாராஷ்டிரத்தின் கலப்பூர் தாலுகாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 16 பேர் பலியாகியுள்ள நிலையில் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

வடமாநிலங்களில் பெய்துவரும் கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. அதன்படி, புதன்கிழமை நள்ளிரவில் ராய்காட்டின் கலப்பூர் தாலுகாவில் உள்ள இர்சல்வாடி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் இடிபாடுகளில் சிக்கினர். 

இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 16 உயர்ந்துள்ளது. பலர் காயமடைந்துள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், நேற்று மாலை முதல் கனமழை காரணமாக மீட்புப் பணிகளை நிறுத்தியுள்ளதாக தேசிய பேரழிவு படையினர் தெரிவித்தனர். 

Advertisement

மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நிலச்சரிவு நடைபெற்ற இடத்தை நேரில் பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் என அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.