அமர்நாத்தில் புனித யாத்திரை தொடங்கி சுமார் 23 நாள்களில் 3.26 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
ஜூலை 1-ம் தேதி தொடங்கிய அமர்நாத் புனித யாத்திரை பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகின்றது.
3,898 பேர் அடங்கிய பயணிகள் குழு இன்று காலை பகவதி நகரில் இருந்து புறப்பட்டுச் சென்றது. அதில் 2,898 ஆண்கள், 898 பெண்கள், 12 குழந்தைகள், 79 சாதுக்கள், 11 சாத்வீக்கள் ஆவார்.
அமர்நாத் யாத்திரை தொடங்கி இதுவரை 36 பேர் இறந்துள்ளனர். 62 நாள்கள் நடைபெறும் யாத்திரை ஆகஸ்ட் 31ம் தேதியுடன் நிறைவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.