மணிப்பூர் விவகாரம் குறித்து மக்களவையில் விவாதம் நடத்த தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் முடங்கி வருகிறது.
இந்நிலையில் இன்றும்(திங்கள் கிழமை) இரு அவைகளிலும் மணிப்பூர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் அமளியில் ஈடுபட்டதால் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | மணிப்பூரில் நடப்பது என்ன?
இதையடுத்து மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மணிப்பூர் விவகாரம் குறித்து மக்களவையில் விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன். மணிப்பூர் குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த முக்கியமான விஷயத்தில் நாடு உண்மையை அறிந்து கொள்வது அவசியம்' என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.