கோப்புப் படம் 
இந்தியா

ஒடிசாவின் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்பதால் ஒடிசாவின் 10 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

DIN

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்பதால் ஒடிசாவின் 10 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடற்கரை பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஒடிசாவின் கஞ்சம், கஜபதி, ராயகாடா, மல்கங்கிரி, கோரபுட், நவரங்காபூர், நுவாபாதா, கலஹந்தி, கந்தமால், போலாங்கிர் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் தெற்கு ஒடிசாவின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக ஜூலை 28 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், செவ்வாயன்று மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று கணித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் பற்றி தரக்குறைவாக பேசிய இருவா் மீது ரயில்வே போலீசாா் வழக்கு

மனிதன் வாழ வேண்டிய வழியை வாழ்ந்து காட்டியவா் ஸ்ரீ ராமபிரான்: சுகிசிவம்

தில்லியில் ஒருவா் சுட்டுக் கொலை; ஒருவா் கைது

லெபனானில் ஆயுதக் கிடங்கில் வெடி விபத்து: 6 ராணுவ நிபுணர்கள் பலி

தில்லி மருத்துவமனையில் தீ விபத்து: ஊழியா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT