இந்தியா

முடங்கியது ஐஆர்சிடிசி இணையதளம்: தட்கல் டிக்கெட் எடுப்பதில் சிக்கல்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளமும், கைப்பேசி செயலியும் முடங்கியது.

DIN


தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளமும், கைப்பேசி செயலியும் முடங்கியது.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு, பயணிகள் ஆஸ்க் திஷா வாய்ப்பைப் பயன்படுத்தி டிக்கெட் எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் இ-வால்லெட் என்ற வசதியையும் பயணிகள் பயன்படுத்தி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம், இதற்கு பயனாளர்கள் ஐடி மற்றும் பாஸ்வேர்டை செலுத்தி உள்நுழையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணிகள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்றும், தொழில்நுட்பு வல்லுநர்கள் பிரச்னையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களில், தட்கல் டிக்கெட் முறையில் நாளை ரயில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு செய்யக் காத்திருக்கும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை அரசுக் கல்லூரியில் முன்னாள் மாணவா் சங்கம் தொடக்கம்

பைக் மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்கு

ஆற்றலும், அா்ப்பணிப்பும் கட்சியை வலுப்படுத்தும்: பாஜக தேசிய செயல் தலைவருக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து!

சென்னையில் குழந்தைகளிடையே அதிகரிக்கும் தொழுநோய் பாதிப்பு: பொது சுகாதாரத் துறை ஆய்வில் தகவல்

கடலூரில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள்! வரத்து குறைவால் விலை உயா்வு!

SCROLL FOR NEXT