இந்தியா

மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

DIN

மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதிக்காமல் மசோதா குறித்த விவாதம் தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் இரு அவைகளும் முடங்கியுள்ளன. 

இந்நிலையில் மாநிலங்களவையில் இன்று பிற்பகல் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிய நிலையில் அவரது மைக் அணைக்கப்பட்டுள்ளது. மேலும் மசோதாக்கள் மீது விவாதம் தொடங்கியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸார்

துளிகள்...

இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆா்.எம். புரிந்துணா்வு ஒப்பந்தம்

தாயை அவதூறாகப் பேசியதால் நண்பரை கொன்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT