கடந்த நிதியாண்டில் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், 5.18 கோடி பணி அட்டைகள் ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் எழுத்துபூர்வமாக செவ்வாய்க்கிழமை அளித்த பதில்:
2021-22-ஆம் நிதியாண்டில் தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் (100 நாள் வேலைத் திட்டம்), 1,49,51,247 பணி அட்டைகள் ரத்து செய்யப்பட்டன.
இது 2022-23-ஆம் நிதியாண்டில் 247 சதவீதம் அதிகரித்தது. அந்த நிதியாண்டில் 5,18,91,168 பணி அட்டைகள் ரத்து செய்யப்பட்டன.
மேற்கு வங்கம், ஆந்திரம், தெலங்கானாவில் அதிக எண்ணிக்கையில் பணி அட்டைகள் ரத்து செய்யப்பட்டன.
போலி பணி அட்டைகள், திட்டத்தின் கீழ் தொடர்ந்து பணியாற்ற மக்கள் விரும்பாதது, கிராம ஊராட்சியில் இருந்து குடும்பத்துடன் நிரந்தரமாக இடம்பெயர்ந்தது, பணி அட்டை பெற்ற நபர் காலமானது போன்ற காரணங்களால் அட்டைகள் ரத்து செய்யப்பட்டன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.