இந்தியா

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்.. கமல்நாத்தின் 5 வாக்குறுதிகள்!

மத்தியப் பிரதேசத்தில் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் விவசாயிகளுக்கு 5 வாக்குறுதிகளை அளித்துள்ளார். 

DIN

மத்தியப் பிரதேசத்தில் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் விவசாயிகளுக்கு 5 வாக்குறுதிகளை அளித்துள்ளார். 

ம.பி.யில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தால் விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்கப்படும். இதுதொடர்பாக கமல்நாத் வெளியிட்ட வாக்குறுதிகள்..

விவசாயிகளின் வங்கிக் கடன் தள்ளுபடி செய்யும் திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும். 

மத்தியப் பிரதேச விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உதவுவதற்காக விவசாய செயல்பாட்டின் செலவைக் குறைக்கும் கொள்கையை காங்கிரஸ் கொண்டு வந்துள்ளது. 

5 எச்.பி மோட்டார் பம்புகளை பயன்படுத்தும் விவசாயிகள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்றும், விவசாயிகளின் மீதமுள்ள மின்கட்டணமும் தள்ளுபடி செய்யப்படும் என்று அவர் அறிவித்தார். 

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் விவசாயிகளுக்கு 12 மணி நேரம் பாசன மின்சாரம் வழங்கப்படும். போராட்டத்தின்போது விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும்.

ஐந்தாண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று ஆளும் பாஜக வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். 

வட்டியை தள்ளுபடி செய்வது விவசாயிகளுக்கு உதவாது. அசல் தொகையை தள்ளுபடி செய்தால் மட்டுமே அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளின் கடன்கள் ஏன் அதிகரித்து வருகின்றன என்பது கவலைக்குரிய விஷயம்? இந்த சிக்கலை தீர்க்க ஒரு கொள்கையை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்று கமல்நாத் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT