இந்தியா

கார்கில் வெற்றி நாள்: நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை!

24-வது கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி, வீர மரணம் அடைந்த மாவீரர்களுக்கு லடாக் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.

DIN

24-வது கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி, வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு லடாக் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, கடற்படை தலைமைத் தளபதி ஆர்.ஹரிகுமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

லடாக் எல்லையில் கார்கில் பகுதியை கைப்பற்ற பாகிஸ்தான் முயற்சித்தது. இதனால் 1999-ம் ஆண்டு இந்திய ராணுவ வீரர்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது. இதுவே, கார்கில் போர் என்றழைக்கப்படுகிறது. 

இதில் பாகிஸ்தானை இந்திய ராணுவம் வீழ்த்தியதையொட்டி ஜூலை 26ஆம் தேதி கார்கில் வெற்றி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு 24வது கார்கில் போர் வெற்றி நாள் கடைபிடிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி லடாக் எல்லைப் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT