c14dmodi065525 
இந்தியா

கார்கில் போரில் வீர மரணமடைந்தவர்களுக்கு தலைவணங்குகிறேன்: பிரதமர் மோடி

கார்கில் போரில் வீர மரணமடைந்த வீரர்களுக்கு தலைவணங்குகிறேன் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். 

DIN

கார்கில் போரில் வீர மரணமடைந்த வீரர்களுக்கு தலைவணங்குகிறேன் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். 

1999ல் காஷ்மீரின் கார்கில் பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊருடுவிய நிலையில், இந்திய ராணுவனத்தினருக்கும் பாகிஸ்தான் படையினருக்கும் 3 மாதங்களாக போர் நடைபெற்றது. ‘ஆபரேஷன் விஜய்’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த போரில் பாகிஸ்தான் ஊடுருவிய கார்கில் பகுதிகளை கைப்பற்றி இந்தியா வெற்றி பெற்ற ஜூலை 26 'கார்கில் விஜய் திவாஸ்' என கடைப்பிடிக்கப்படுகிறது. 

இந்நிலையில் கார்கில் வெற்றி நாளையொட்டி தலைவர்கள் பலரும் நினைவு கூர்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'கார்கில் விஜய் திவாஸ், இந்திய நாட்டின் துணிச்சலானவர்களின் வீரக் கதையை கண்முன் கொண்டு வருகிறது. அவர்கள் எப்போதும் நாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளனர். இந்த சிறப்புமிக்க நாளில், இதயபூர்வமாக அவர்களுக்கு தலைவணங்குகிறேன். வாழ்க இந்தியா' என்று பதிவிட்டுள்ளார். 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும், நாட்டைக் காக்க உயிர்த்தியாகம் செய்த போராளிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவதாக தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT