முகப்பு
இந்தியா

மக்களவை ஒத்திவைப்பு: மாநிலங்களவையில் நீடிக்கும் அமளி!

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலங்களவையிலும் தொடர் அமளி நிலவி வருகின்றது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:43 AM
பகிர்:

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலங்களவையிலும் தொடர் அமளி நிலவி வருகின்றது. 

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள்  அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மழைக்கால கூட்டத்தொடரின் 5-வது நாளான இன்று நாடாளுமன்றத்தின் அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களவை பிற்பகல் 12 மணிக்கு நடைபெறும் என மக்களவையின் சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்துள்ளார்.

மணிப்பூா் விவகாரம் குறித்து அரசு மற்றும் எதிா்க்கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் செவ்வாய்க்கிழமை நடத்திய சமரச ஒருங்கிணைப்புக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர் கூச்சல், குழப்பம் ஏற்பட்டு வருகின்றது. 

முழு கட்டுரையைப் படிக்க →