இந்தியா

நாடாளுமன்றத்துக்கு கருப்பு உடையில் எதிர்க்கட்சியினர் வருகை!

மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ‘இந்தியா’ கூட்டணியின் எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து வந்துள்ளனர்.

DIN

தில்லி: மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ‘இந்தியா’ கூட்டணியின் எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து வந்துள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கியது. எனினும், 5 நாள்களாக மணிப்பூர் விவகாரம் குறித்து இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், நாடாளுமன்ற அலுவல்கள் பாதிக்கப்பட்டு இரு அவைகளும் முடங்கியுள்ளன.

இந்நிலையில், மணிப்பூர் விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் கருப்பு நிற உடை அணிந்து வந்துள்ளனர்.

முன்னதாக, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அலுவலகத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் ஆலோசனை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிரத்னம் படத்தில் நாயகனாகும் துருவ் விக்ரம்!

ரொனால்டோவின் நம்பிக்கை... வெற்றி ரகசியம் பகிர்ந்த சிராஜ்!

பாகிஸ்தான் பருமழைக்கு 302 பேர் பலி, 727 பேர் காயம்!

பாஜக கூட்டணி எம். பி. க்கள் கூட்டத்தில் பிரதமரை வாழ்த்தி ஹர ஹர மகாதேவ் கோஷம்!

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

SCROLL FOR NEXT