நாடாளுமன்றம் 
இந்தியா

7-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்! மக்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மாநிலங்களவையைத் தொடர்ந்து மக்களவையும் இன்று நாள் முவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN

நாடாளுமன்ற மாநிலங்களவையைத் தொடர்ந்து மக்களவையும் இன்று நாள் முவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத் தொடா் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் 7-வது நாளாக இன்று முடங்கியது. 

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றன. 

இந்நிலையில் இன்று காலை மாநிலங்களவையில் நிகழ்வுகள் தொடங்கிய உடனே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட மக்களவையும் பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

இரு அவைகளும் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

SCROLL FOR NEXT