இந்தியா

மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியானார் தேவேந்திர குமார் உபாத்யாய்!

DIN


மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாய் சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். 

ஆளுநர் மாளிகையில் இன்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாராஷ்டிரம் ஆளுநர் ரமேஷ் பாய்ஸ் நீதிபதி உபாத்யாய் குமாருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். 

உபாத்யாய் மும்பை நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாவதற்கு முன்பு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தார். 

முன்னதாக தலைமை நீதிபதியாக இருந்த சிஜே ஆர்.டி தனுகா மே30-ம் தேதி ஓய்வு பெற்றதையடுத்து, மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி காலியானது. இதையடுத்து, நீதிபதி நிதின் ஜம்தார் தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 

ஜூன் 16, 1965 இல் பிறந்த உபாத்யாய் 1991 இல் லக்னௌ பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பிற்கான பட்டம் பெற்றார்.

பதவியேற்பு விழாவில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு கனமழை: தண்ணீர் பஞ்சத்துக்கு முடிவு?

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுடன் கூட்டணி இல்லை:சரத் பவார்

இரவு 8 மணிக்குமேல்...: தமன்னாவின் மோசமான பண்பு என்ன தெரியுமா?

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருந்தது; டி20 உலகக் கோப்பையில் இடம்பிடித்த இந்திய வீரர் பேச்சு!

SCROLL FOR NEXT