முகப்பு
இந்தியா

அமர்நாத்தில் 3.77 லட்சம் பேர் சுவாமி தரிசனம்!

அமர்நாத்தில் இதுவரை 3.77 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:44 AM
பகிர்:

அமர்நாத்தில் இதுவரை 3.77 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

ஜூலை 1-ம் தேதி தொடங்கிய அமர்நாத் புனித யாத்திரை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 28வது நாளான நேற்று 7 ஆயிரம் பேர் தரிசித்துள்ள நிலையில், மொத்தம் இதுவரை 3.77 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

இதையடுத்து, 2,050 பேர் அடங்கிய புதிய குழு இன்று காலை பகவதி நகர் யாத்திரி நிவாஸில் இருந்து புறப்பட்டுச் சென்றது. இதில், 1,618 ஆண்கள், 357 பெண்கள், 12 குழந்தைகள், 54 சாதுக்கள், 9 சாத்வீக்கள் புறப்பட்டுச் சென்றனர். 

அமர்நாத் யாத்திரை தொடங்கி இதுவரை 36 பேர் பலியாகினர். 62 நாள்கள் நிகழும் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 31 நிறைவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →