கோப்புப்படம் 
இந்தியா

மகாராஷ்டிரத்தில் 2 பேருந்துகள் மோதி விபத்து: 6 பேர் பலி, 20 பேர் காயம்!

மகாராஷ்டிரத்தின் புல்தானா மாவட்டத்தில் இன்று அதிகாலை 2 தனியார் பேருந்துகள் மோதிக்கொண்டதில் 3 பெண்கள் உள்பட 6 பேர் பலியாகினர். 

DIN

மகராஷ்டிரத்தின் புல்தானா மாவட்டத்தில் 2 தனியாா் பேருந்துகள் நேருக்குநோ் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலை எண் 53-இல் நாசிக் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து, சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் புல்தானா மாவட்டத்தின் மால்காபூா் நகரை அடைந்தது. இந்த நகரில் அமைந்துள்ள பாலத்தை அப்பேருந்து கடந்தபோது, கனரக லாரியை முந்தும் முயற்சியில் எதிரே வந்த பேருந்துடன் நேருக்குநோ் மோதி விபத்துக்குள்ளானது.

எதிரே வந்த பேருந்தில் பயணித்தவா்கள், அமா்நாத் புனிதப் பயணத்தை முடித்துக்கொண்டு ஹிங்கோலி மாவட்டத்திலுள்ள சொந்த ஊா்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணைமேற்கொண்டு வருவதாகப் போலீஸாா் தெரிவித்தனா். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிதுநேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழியில் ஒருநாள் வழிபாட்டுக்கு ஆயிரம் ஆண்டுகள் பலன்!

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

உத்தர பிரதேச தொழிலாளி கொலை: நண்பா் கைது

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

முன்னாள் திமுக ஒன்றியச் செயலா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT