தில்லி: வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் 8,330 இந்தியர்கள் சிறைக் கைதிகளாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு சிறைகளில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரண் எழுத்துப்பூர்வ பதிலளித்துள்ளார்.
அதில், “மொத்தம் 90 நாடுகளின் சிறைகளில் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகளாக 8,330 இந்தியர்கள் உள்ளனர். அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 1,611 இந்தியர்கள் கைதிகளாக உள்ளனர்.
செளதி அரேபியாவில் 1,461, நேபாளத்தில் 1,222 பேர், கத்தாரில் 696 பேர், பாகிஸ்தானில் 308 பேர் கைதிகளாக உள்ளனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.