இந்தியா

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மகாணாத்தில் ஜாமியத் உலமா இஸ்லாம் பாஸில் மாநாட்டில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. 

DIN


பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மகாணாத்தில் ஜாமியத் உலமா இஸ்லாம் பாஸில் மாநாட்டில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. 

ஜூலை 30ல் பஜாவுர் மாவட்டத்தின் கார் நகரில் ஜாமியத் உலமா இஸ்லாம் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் மாநாட்டில் திடீரென தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. 

இதில் ஜாமியத் உலமா இஸ்லாம் பாஸில் அமைப்பின் தலைவர் மவுலானா ஜியாவுல்லா ஜான் உள்பட பலரும் கொல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பில் 10 கிலோ வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக ஆய்வாளர் அக்தர் ஹயாத் கான் தெரிவித்தார். 

இந்த குண்டுவெடிப்பில் 44 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. 

இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த ஒரு குழுவோ அல்லது தனி நபரோ பொறுப்பேற்கவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தான்குளம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி

கன்னியாகுமரி பள்ளியில் இன்று சாதனைக் குழந்தைகளுக்கு விருது வழங்கும் விழா

அம்பையில் போராட்டத்தில் ஈடுபட முயற்சி

நேரு நா்ஸிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

உடன்குடி கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

SCROLL FOR NEXT