இந்தியா

ஊதியத்தில் ஒரு பகுதியை நிவாரணத்துக்கு வழங்குக: எம்.பிக்களை வலியுறுத்தும் வருண் காந்தி!

ஒடிசா ரயில் விபத்துக்குள்ளான குடும்பங்களுக்கு உதவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனது ஊதியத்தில் ஒரு பகுதியை நிவாரணத்து நன்கொடையாக வழங்குமாறு பாஜக எம்.பி. வருண் காந்தி வலியுறுத்தியுள்ளார். 

DIN


ஒடிசா ரயில் விபத்துக்குள்ளான குடும்பங்களுக்கு உதவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனது ஊதியத்தில் ஒரு பகுதியை நிவாரணத்து நன்கொடையாக வழங்குமாறு பாஜக எம்.பி. வருண் காந்தி வலியுறுத்தியுள்ளார். 

ஒடிசாவில் நேற்றிரவு அடுத்தடுத்த மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 280-ஆக உயர்ந்துள்ளது. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இதுகுறித்து பாஜக வெளியிட்ட டிவிட்டர் பதிவில், 

ஒடிசா ரயில் விபத்து மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் சிக்கியர்களுக்கு முதலில் நாம் ஆதரவு தர வேண்டும். உறவுகளை இழந்துவாடும் மக்களுக்கு துணை நிற்க வேண்டும். 

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது வேண்டுகோள் என்னவென்றால், நாம் அனைவரும் முன்வந்து அவரவர் ஊதியத்தின் ஒரு பகுதியை ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக அளிக்க வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார். 

நேற்று நிகழ்ந்த மிக மோசமான ரயில் விபத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

SCROLL FOR NEXT