இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை

DIN


புவனேசுவரம்: ஒடிசா ரயில் விபத்தில் 275 போ் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. 

இதில், இதுவரை 275 பேர் பலியாகியாகி உள்ளதாகவும், 88 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 187 உடல்கள் அடையாளம் காணப்பட வேண்டியுள்ளது. உடல்களை அடையாளம் காணப்படுவது சவாலாக உள்ளது. 1,175 பேர் காயமடைந்துள்ளதாக அம்மாநில தலைமைச் செயலாளர் பி.கே.ஜெனா கூறியுள்ளார். 

இந்நிலையில்,  பாலாசோர் கோர ரயில் விபத்துக்கான "மூலக் காரணம்" மற்றும் அதற்கு காரணமான "குற்றவாளிகள்" அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஒடிசாவின் பாலாசோர் கோர ரயில் விபத்து குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளதாக அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நிர்வாகத் தகவல்களைக் கருத்தில் கொண்டு, பாலாசோர் கோர ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது,” என்றார். மீட்புப் பணிகள் நிறைவடைந்து சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏராளமான மனிதவளம் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக 7க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள், இரண்டு விபத்து நிவாரண ரயில்கள், மூன்று நான்கு ரயில்வே மற்றும் சாலை சீரமைக்கும் கிரேன்கள் ஈடுபட்டுள்ளது. தண்டாளம் தொடர்பான பணிகள் முடிந்து மேல்நிலை வயரிங் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

வாக்குச்சாவடியை சூறையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா பட்டேல்.. யார் இவர்?

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT