இந்தியா

சச்சின் பைலட் புதிய கட்சி தொடங்குவாரா? ராஜஸ்தான் பொறுப்பாளர் பதில்!!

காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் விரைவில் புதிய கட்சித் தொடங்கவுள்ளது குறித்து  ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் விளக்கம் அளித்துள்ளார். 

DIN


காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் விரைவில் புதிய கட்சித் தொடங்கவுள்ளதாக அறிவித்தது குறித்து  ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் விளக்கம் அளித்துள்ளார். 

முந்தைய பாஜக அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில் தற்போதைய காங்கிரஸ் முதல்வா் அசோக் கெலாட் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சச்சின் பைலட் குற்றம் சாட்டி வருகிறார். 

இதனால், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தற்போதைய காங்கிரஸ் ஆட்சியின் மீதி அதிருப்தி அடைந்த சச்சின் பைலட், ஊழலுக்கு எதிராக மே 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மாநிலத்தில் நடைப்பயணம் மேற்கொண்டார். 

சச்சின் பைலட்டின் இந்த செயலால், அசோக் கெலாட் உள்பட காங்கிரஸ் கட்சியின் பல மூத்த தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இது தொடர்பாக பேசிய ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங், சச்சின் பைலட் புதிய கட்சி தொடங்குவது குறித்து எதுவும் என்னிடம் பேசவில்லை. அவர் அதுபோன்று செய்யமாட்டார் என்று நம்புகிறேன். அவர் இந்த குறுகிய காலத்திலேயே புதிய கட்சி தொடங்குவது சரியல்ல. அவருக்கு அது தேவையில்லாத ஒன்று எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT