கோப்புப்படம் 
இந்தியா

சச்சின் பைலட் தனிக்கட்சியா?: காங்கிரஸ் மறுப்பு

ராஜஸ்தான் முன்னாள் துணைமுதல்வர் சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்குவதாக வெளியான செய்திக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.

DIN

ராஜஸ்தான் முன்னாள் துணைமுதல்வர் சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்குவதாக வெளியான செய்திக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலர் கேசி வேணுகோபால் தெரிவித்திருப்பதாவது, சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக பரவும் தகவல் வதந்தி. ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலை காங்கிரஸ் கட்சி ஒற்றுமையுடன் எதிர்கொள்ளும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய பாஜக அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில் தற்போதைய காங்கிரஸ் முதல்வா் அசோக் கெலாட் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சச்சின் பைலட் குற்றம் சாட்டி வருகிறார். இதனால், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனால், தற்போதைய காங்கிரஸ் ஆட்சியின் மீதி அதிருப்தி அடைந்த சச்சின் பைலட், ஊழலுக்கு எதிராக மே 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மாநிலத்தில் நடைப்பயணம் மேற்கொண்டார். சச்சின் பைலட்டின் இந்த செயலால், அசோக் கெலாட் உள்பட காங்கிரஸ் கட்சியின் பல மூத்த தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT