இந்தியா

மகளிர் மட்டும்.. கேரளத்திலிருந்து புறப்பட்ட ஹஜ் விமானம்

கேரள மாநிலம் காரிபூரில் அமைந்துள்ள காளிகட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதல் முறையாக மகளிர் மட்டும் பயணிக்கும் ஹஜ் விமானம் இயக்கப்பட்டுள்ளது.

DIN


கேரள மாநிலம் காரிபூரில் அமைந்துள்ள காளிகட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதல் முறையாக மகளிர் மட்டும் பயணிக்கும் ஹஜ் விமானம் இயக்கப்பட்டுள்ளது.

145 பெண் யாத்ரீகர்களுடன், 6 பெண் ஊழியர்களுடன் இந்த விமானம் புறப்பட்டுள்ளது. ஆண் துணையின்றி செல்லும் முஸ்லிம் பெண்கள் மட்டுமே பயணிக்கும் வகையில் இந்த விமானம் இயக்கப்பட்டுள்ளது. மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் ஜான் பர்லா, இந்த விமானத்தக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

நாட்டில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் கொள்கையின் முக்கிய நிகழ்வாக இந்த மகளிர் மட்டும் விமானம் இயக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த விமானத்தை, கனிகா மெஹ்ரா என்ற பஞ்சாபைச் சேர்ந்த பெண் விமானியும், கரிமா பஸ்ஸி என்ற துணை விமானியும் இயக்கினர். இவர்களுடன் 4 பெண் ஊழியர்களும் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இதுபோல, கேரளத்தில் இருந்து மகளிர் மட்டும் ஹஜ் விமானங்கள் 16 இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்திலிருந்து இந்த ஆண்டு மட்டும் 45 வயதுக்கு மேற்பட்ட 2,733 பெண்கள், ஆண் துணையின்றி ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவிருக்கிறார்கள். அவர்களில் 1,718 பேர் காரிபூரிலிருந்து பயணம் மேற்கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

SCROLL FOR NEXT