கோப்புப்படம் 
இந்தியா

தேசத்திற்கு சேவையாற்றுவது பெருமிதமாக உள்ளது: பிரதமர் மோடி

முன்னோக்கிய வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் தேசத்துக்கு சேவையாற்றுவது பெருமிதம் அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

DIN


புதுதில்லி: முன்னோக்கிய வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் தேசத்துக்கு சேவையாற்றுவது பெருமிதம் அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை பாஜக நடத்தி வருகிறது. 

மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள், விடியோக்கங்கள் மற்றும் தகவல்களை குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில்,  ‘இந்தியா ஃபா்ஸ்ட் 9 ஆண்டு’ என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

அதில், “ஊக்கம் குறையாத உறுதியுடன் முன்னோக்கி நடைபோடும் ஒரு தேசத்திற்கு சேவைசெய்வதில் பெருமிதம் கொள்கிறேன். பன்னாட்டு அமைப்புகள் முதல்  தற்சார்பு இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம் என பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி முன்னேறிச் செல்வது நமது மக்களின் வலிமை மற்றும் உணர்வு ஊக்கத்துக்கு சான்றாக உள்ளது" என்று கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நண்பகல் கடந்தது... கஜோல்!

உன் பார்வையில்... ஜீவிதா!

மெதுவாய் மலர்கிறேன்... தேஜஸ்வினி

முதல் டி20: ஆஸி. 10 ஓவரில் 88 ரன்கள், 6 விக்கெட்டுகள்!

“அவருக்கு வேறு என்ன தெரியும்?” EPS-க்கு அமைச்சர் K.N. Nehru பதில்! | DMK

SCROLL FOR NEXT