முகப்பு
இந்தியா

மும்பை தாராவியில் தீ விபத்து: 6 பேர் காயம்

மும்பையின் தாராவி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:00 PM
கோப்புப்படம்
பகிர்:

மும்பை (மகாராஷ்டிரா): மும்பையின் தாராவி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

மகாராஷ்டிரம் மாநிலம் "மும்பை தாராவி பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்." 

இந்த தீ விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள சியோன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டட தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. 

தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தீ விபத்தில் காயமடைந்தவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக சியோன் மருத்துவமனையின் உதவி மருத்துவ அதிகாரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.