உள்துறை அமைச்சர் அமித் ஷா 
இந்தியா

பேரிடர் மேலாண்மை: அனைத்து மாநிலங்களுடன் அமித் ஷா நாளை(ஜூன் 13) ஆலோசனை

நாட்டில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை(ஜூன் 13) ஆலோசனை மேற்கொள்கிறார். 

DIN

நாட்டில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை(ஜூன் 13) ஆலோசனை மேற்கொள்கிறார். 

தில்லியில் காணொலி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா உள்ளிட்ட உள்துறை அமைச்சக அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய பேரிடர் மீட்பு படை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.

பேரிடர் மேலாண்மையில் உள்ள சவால்களைக் கருத்தில் கொண்டும் இதன் அடுத்த கட்டத்தை எதிர்கொள்வதற்கான தயார்நிலை குறித்தும் கூட்டத்தில் பேசப்படவுள்ளது. பேரிடர் மேலாண்மையில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்படுகிறது.

தற்போது அரபிக்கடலில் பிபர்ஜாய் புயல் உருவாகியுள்ள சூழ்நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

ராஜஸ்தானில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய வெளிநாட்டவர்! வெளியேறுமாறு நோட்டீஸ்!

மேலை மெய்யியலுக்கு வழிகாட்டிய வள்ளுவம்

தொல்லியலும் வரலாற்றுச் சான்றுகளும்

கடந்த நேரமும் நடந்த தூரமும் - சுயசரிதை

SCROLL FOR NEXT