கோப்புப் படம் 
இந்தியா

கழிப்பறையில் விஷவாயு தாக்கி தம்பதி பலி!

பெங்களூருவில் வீட்டின் கழிப்பறையில் தம்பதி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

பெங்களூரு: பெங்களூருவில் வீட்டின் கழிப்பறையில் தம்பதி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் கழிவறையில் இருந்த போது, விஷவாயுவை தாக்கி அந்த தம்பதியினர் இறந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகர், பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த சுதா ராணி ஆகியோர் பெங்களூரு எலஹங்கா தாலுகாவில் உள்ள தாராபனஹள்ளி கிராமத்தில் தங்கி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் வேலை செய்து வந்தனர்.

இது குறித்து காவல் துறையினர் தெரிவித்ததாவது:

பாதிக்கப்பட்டவர்கள் கழிப்பறையின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடியதால் கெய்சரிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைட் சுவாசித்து இறந்திருக்கலாம் என்றனர்.

திருமணத்திற்கு முன்பு இந்த தம்பதியினர் ஒன்றாக சிறிது காலம் சேர்ந்து இருந்ததாக தெரிவித்துள்ள நிலையில், உள்ளூர்வாசிகள் இவர்கள் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT