இந்தியா

ஹரியாணாவில் விவசாயிகள் 2-வது நாளாக போராட்டம்!

ஹரியாணாவில் சூரியகாந்தி விதைகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கக்கோரி விவசாயிகள் 2-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

DIN

ஹரியாணாவில் சூரியகாந்தி விதைகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கக்கோரி விவசாயிகள் 2-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹரியாணா மாநிலத்தில் சூரியகாந்தி சாகுபடி அதிகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் சூரியகாந்தி விதைகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வேண்டும் என குருக்ஷேத்ரா பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.

இது தொடர்பாக பல வழிகளில் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் அரசு கொள்முதல் செய்யும் சூரிய காந்தி விதைகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் எனக் கோரி குருக்ஷேத்ராவில் விவசாயிகள் 2-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாரதிய கிசான் யூனியன் அமைப்பின் தலைவரான ராகேஷ் திகைத் தலைமையில் இந்த போராட்டமானது நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 50-ல் சென்னையைச் சுற்றிப் பார்க்க வேண்டுமா? சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!

பூக்களின் விலை உயர்வால் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை: வியாபாரிகள் தகவல்

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ. 15,000 ஆக உயர்வு! - அன்பில் மகேஸ் அறிவிப்பு

நாட்டின் பாரம்பரியத்தில் பரவியிருக்கும் தமிழ் கலாசாரம்! மோடி

பாகிஸ்தானில் பிறந்த அமெரிக்க வீரர்களுக்கு இந்தியாவில் விசா மறுப்பு!

SCROLL FOR NEXT