இந்தியா

அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்பு: டி.ராஜாவுடன் கேஜரிவால் சந்திப்பு!

தில்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சந்தித்துப் பேசினார். 

DIN

அவசரச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வரும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தில்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவை புதன்கிழமை சந்தித்துப் பேசினார். 

தில்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இதையடுத்து தில்லியில் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார் தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கேஜரிவால்.

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்களைத் சந்தித்து பேசினார். 

இதன் தொடர்ச்சியாக இன்று தில்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவை சந்தித்து அவசரச் சட்டத்துக்கு ஆதரவு கோரினார் கேஜரிவால். 

கேஜரிவாலின் கோரிக்கைக்கு ஏற்ப தில்லி அவசரச் சட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக டி.ராஜாவும் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT