முகப்பு
இந்தியா

கர்நாடக சாலை விபத்தில் புதுமணத் தம்பதி பலி

கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் நேரிட்ட சாலை விபத்தில், புதுமணத் தம்பதி பலியானதால், உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

Updated On : 14 ஜூன், 2023 at 11:26 AM
கோப்புப்படம்
பகிர்:


விஜயபுரா: கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் நேரிட்ட சாலை விபத்தில், புதுமணத் தம்பதி பலியானதால், உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

மல்லு தேர்டல் (31) தனது இரு சக்கர வாகனத்தில் மனைவி காயத்ரியுடன் (24) சோலாபூர் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டேங்கர் லாரி மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இருவருக்கும் கடந்தமாதம் தான் திருமணமாகியிருந்த நிலையில், ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், புதுமணத் தம்பதி சாலை விபத்தில் பலியானது உறவினர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Advertisement

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.