மேற்கு வங்கத்தில் வெடிகுண்டுகள் நிறைந்த பை பறிமுதல்: 8 பேர் கைது
மேற்கு வங்க மாநிலம் பிஷ்ணுபூரில் காரிலிருந்து வெடிகுண்டுகள் நிறைந்த பை ஒன்றை போலீஸார் மீட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் பிஷ்ணுபூரில் காரிலிருந்து வெடிகுண்டுகள் நிறைந்த பை ஒன்றை போலீஸார் மீட்டுள்ளனர்.
இதுதொடர்பாக காவல் துணை கண்காணிப்பாளர் கூறுகையில்,
பிஷ்ணுபூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டோம். அப்போது அதிலிருந்து வெடிகுண்டுகள் நிறைந்த பை ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எங்கிருந்து வெடிகுண்டுகள் நிறைந்த பையைக் கொண்டு வருகின்றனர் என்று போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.