காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 
இந்தியா

மணிப்பூரின் நிலைமை மன உளைச்சலை ஏற்படுத்துகிறது: பிரியங்கா

மணிப்பூரின் நிலைமை மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

DIN

மணிப்பூரின் நிலைமை மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பிரியங்கா வெளியிட்ட டிவிட்டர் பதிவில், 

மணிப்பூரின் நிலைமை மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. பாஜக தலைமையிலான மத்திய அரசு மணிப்பூர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது என்று அவர் பதிவிட்டுள்ளார். 

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே இம்மாத தொடக்கத்தில் பெரும் கலவரம் மூண்டது.

மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வரும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். இதுவே, இரு சமூகத்தினரின் மோதலுக்கு பிரதான காரணமாகும்.

இந்நிலையில், மைதேயி சமூகத்தினா் அதிகம் வசிக்கும் இம்பால் கிழக்கு மாவட்டம் மற்றும் பழங்குடியினரை அதிகம் கொண்ட காங்போபி மாவட்டத்தின் எல்லையில் உள்ள காமன்லோக் பகுதியில் மீண்டும் பாதுகாப்புப் படையினருக்கும் கலவரக்காரர்களுக்கும் இடையே வன்முறை நிகழ்ந்து வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராட்டம்: படப்பிடிப்பு தளத்தில் காவல் துறை குவிப்பு!

இந்த வாரம் கலாரசிகன் - 09-11-2025

கலித்தொகையில் இளவேனில் காலம்!

போரைத் தடுக்கும் தும்பிகள்!

ஓரேர் உழவரா? நக்கீரரா?

SCROLL FOR NEXT