இந்தியா

நேபாள அதிபர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

நேபாள அதிபர் ராம்சந்திர பவ்டெல் நெஞ்சுவலி காரணமாக இன்று காலை மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

DIN

நேபாள அதிபர் ராம்சந்திர பவ்டெல் நெஞ்சுவலி காரணமாக இன்று காலை மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக அவரது தனி செயலாளர் சிரஞ்சீவி அதிகாரி வெளியிட்ட தகவலில், 

நேபாள அதிபர் திரிபுவன் பல்லைக்கழக கற்பித்தல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். 

78 வயதான அதிபர் முன்னதாக, கடந்த 13-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், காத்மண்டு நகரில் உள்ள ஷாஹித் கங்காலால் தேசிய இருதய மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோபிளாடிக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில், இரண்டாவது முறையாக அவருக்கு இன்று காலை நெஞ்சு வலி காரணமாக மகாராஜ்கஞ்ச் பகுதியில் உள்ள ஷீத்தல் நிவாஸில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவனையில் இன்ஜ அதிகாலை 2 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அதிகாலை 5 மணிக்கு மன்மோகன் கார்டியோதோராசிக் வாஸ்குலர் மையத்திற்கு மாற்றப்பட்டார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக, கடந்த ஏப்ரல் 19ல் விமானத்தில் சிகிச்சைக்காக தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து ஏப்ரல் 30ல் நேபாளத்திற்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

SCROLL FOR NEXT