பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான வேலைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இளைஞர்களின் நம்பிக்கை நசுக்கப்படுவதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அரசு தங்களது சில பணக்கார நண்பர்களின் பயனுக்காக மட்டுமே செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒரு காலத்தில் பொதுத் துறை நிறுவனங்கள் இந்தியாவின் பெருமையாக இருந்தது. இளைஞர்கள் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவதை தங்களது கனவாக கொண்டிருந்தனர். ஆனால், இன்று அரசு பொதுத்துறை நிறுவனங்கள் தங்களது முக்கியத்துவத்தை இழந்து வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்து விட்டன. கடந்த 2014 ஆம் ஆண்டு 16.9 லட்சமாக இருந்த பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 14.6 லட்சமாக குறைந்துள்ளது.
வளர்ச்சியை நோக்கியை செல்லும் நாட்டில் இது போன்று வேலைவாய்ப்புகள் குறையுமா? 1,81,127 பேர் பிஎஸ்என்எல்-ல் இருந்து வேலையை இழந்துள்ளனர். ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். ஆனால், வேலை வாய்ப்பினை உருவாக்குவதற்கு பதில் 2 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை நீக்கியுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.