முகப்பு
இந்தியா

அசாமில் கனமழை: 33,000 பேர் பாதிப்பு; 142 கிராமங்கள் நீரில் மூழ்கின!

அசாம் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் 33,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 142 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 

Updated On : 19 ஜூன், 2023 at 3:20 PM
பகிர்:

அசாம் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் 33,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 142 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 

அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் அங்கு பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. 

மேலும் தொடர்ந்து அடுத்த 5 நாள்களுக்கு கனமழை இருப்பதாகக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம் கோக்ராஜ்ஹர், சிராங், பக்ஸ்சா, பர்பேட்டா, போன்கைகான் ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Advertisement

அசாமில் பெய்த கனமழையினால் 33,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் லக்கிம்பூர் பகுதி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. 142 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் அரசு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அரசு சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.