கோப்புப்படம் 
இந்தியா

2020-க்கு பிறகு 50-க்கும் கீழ் குறைந்த ஒருநாள் கரோனா பாதிப்பு!

நாட்டில் கடந்த 2020-க்கு பிறகு ஒரு நாள் கரோனா பாதிப்பு 50-க்கும் கீழ் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

DIN

நாட்டில் கடந்த 2020-க்கு பிறகு ஒரு நாள் கரோனா பாதிப்பு 50-க்கும் கீழ் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை (4,49,93,579) கோடியாக  உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இதையடுத்து இதுவரை பலியானோர் எண்ணிக்கை  5,31,893 ஆக உள்ளது. கரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,844 ஆகப் பதிவாகியுள்ளது. 

இதுவரை மொத்தம் 4,44,59,838 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.66 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT