இந்தியா

குடியரசுத்தலைவருடன் ராஜ்நாத் சிங், ஜெ.பி. நட்டா சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர். 

DIN

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர். 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று தனது 65 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தார். 

அதுபோல பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவும் குடியரசுத் தலைவரை சந்தித்து வாழ்த்து கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

மகளிர் உலகக் கோப்பைக்கான ஐசிசி அணியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்திக்கு இடம்!

SCROLL FOR NEXT