ஒடிசா ரயில் விபத்து 
இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: விசாரணை வளையத்தில் இருந்த பொறியாளர் தலைமறைவா?

ஒடிசா ரயில் விபத்து தொடர்பான சிபிஐயின் விசாரணை வளையத்தில் இருந்த ரயில்வே பொறியாளர் தலைமறைவானதால், அவரின் வீட்டுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.

DIN

பாலசோர்: ஒடிசா ரயில் விபத்து தொடர்பான சிபிஐயின் விசாரணை வளையத்தில் இருந்த ரயில்வே பொறியாளர் தலைமறைவானதால், அவரின் வீட்டுக்கு காவல்துறையினர் சீல் வைத்ததாக தகவல் வெளியாகின.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் மோதிக் கொண்டதில் 290-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த கோர விபத்து தொடர்பான விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.

விபத்து நடந்தபோது பணியில் இருந்த சிலரை சிபிஐ தங்களின் வளையத்துக்குள் கொண்டுவந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிபிஐயின் விசாரணை வளையத்தில் இருந்த சிக்னல் பிரிவு இளநிலை பொறியாளர் அமீர் கான், பாலசோரில் அவர் குடியிருந்த வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகின.

மேலும், அவரின் வீட்டைப் பூட்டைப் பூட்டி சிபிஐ காவல்துறையினர் சீல் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெல்ல முடியாது... ரஜிஷா விஜயன்!

முதல்வர் ஸ்டாலினுடன் காங்கிரஸ் ஐவர் குழு சந்திப்பு!

'பளிச்'சிவப்பு... நேகா ஷெட்டி!

SIR மூலம் பாஜக தனது சொந்த கல்லறையை தோண்டுகிறது! - மமதா பானர்ஜி | செய்திகள்: சில வரிகளில் | 3.12.25

திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

SCROLL FOR NEXT