கோப்புப்படம் 
இந்தியா

மும்பையில் மின்தூக்கி அறுந்து விபத்து:  அதிஷ்டவசமாக உயிர்தப்பிய 13 பேர்!

மும்பையில் மின்தூக்கி அறுந்து விழுந்த விபத்தில் 13 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். 

DIN

மும்பையில் மின்தூக்கி அறுந்து விழுந்த விபத்தில் 13 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். 

லோயர் பரேலில் உள்ள உலக வர்த்தக 16 மாடிக்  கட்டடத்தின் சி பிரிவில் இன்று காலை 10.45 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக பேரிடர் கட்டுப்பட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

13 பேர் சென்ற மின்தூக்கியில் இந்த விபத்து ஏற்பட்டு 4ஆவது மாடியிலிருந்து தரை தளத்திற்கு அறுந்து விழுந்தது.

சத்தம் கேட்டு அருகிலிருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் விரைந்து வந்து மின்தூக்கியில் சென்றவர்களை மீட்டனர். காயமடைந்தவர்களில் 8 பேர் அருகில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மற்றவர்கள் லேசான காயங்களுடன் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினர். 

விபத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் உள்பட மீதமுள்ளவர்களின் நிலை சீராக உள்ளது. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT