கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் தளத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று யோகா செய்தார். 
இந்தியா

சர்வதேச யோகா நாள்: மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் பங்கேற்பு!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்களும், மாநில முதல்வர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

DIN

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்களும், மாநில முதல்வர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

சர்வதேச யோகா தினமானது ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன்படி, இந்தாண்டு 9-வது யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா.வில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்களும் பல்வேறு இடங்களில் நடைபெறும் யோகா நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளனர்.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் தளத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று யோகா செய்தார்.

அதேபோல், மத்திய பிரதேசத்தில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் மற்றும் அம்மாநில முதல்வர் சிவராஜ் செளகான், மகாராஷ்டிரத்தில் பியூஸ் கோயல் மற்றும் தர்மேந்திர பிரதான், ஒடிஸாவில் அஸ்வினி வைஸ்ணவ் மற்றும் அம்மாநில முதல்வர் ஏக்நாத் சிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஹிமாசலப் பிரதேசத்தில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், உத்தரப் பிரதேசத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஹரித்வாரில் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, அசாமில் அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT