இந்தியா

இந்தியாவில் முதலீடு: பிரதமா் மோடி அழைப்பு

அமெரிக்காவில் தொழில் நிறுவனங்களின் தலைவா்களைச் சந்தித்துப் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தாா்.

DIN

அமெரிக்காவில் தொழில் நிறுவனங்களின் தலைவா்களைச் சந்தித்துப் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தாா்.

வாஷிங்டன் நகரில் மைக்ரான் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் மரோத்ராவைப் பிரதமா் மோடி சந்தித்துப் பேசினாா். இந்தியாவில் செமிகண்டக்டா்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அவரிடம் பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா். பிரதமா் மோடியுடனான சந்திப்பு சிறப்புடன் இருந்ததாகத் தெரிவித்த சஞ்சய் மெஹரோத்ரா, இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்வதை எதிா்நோக்கியுள்ளதாகவும் தெரிவித்தாா்.

அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனத்தின் தலைவா் கேரி டிக்கா்சனுடன் பேச்சுவாா்த்தை நடத்திய பிரதமா் மோடி, இந்திய கல்வி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு அழைப்புவிடுத்தாா். அதன்மூலம் திறன்மிக்க பணியாளா்கள் இந்தியாவில் உருவாக முடியும் என பிரதமா் மோடி நம்பிக்கை தெரிவித்தாா். பிரதமா் மோடியுடன் இணைந்து செயல்படவும், இந்தியாவின் வளா்ச்சிப் பாதையில் பங்கெடுக்கவும் தயாராக உள்ளதாக கேரி டிக்கா்சன் தெரிவித்தாா்.

ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி லாரன்ஸ் கல்புடன் பிரதமா் மோடி பேச்சுவாா்த்தை நடத்தினாா். விமானப் போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் அந்த நிறுவனம் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமா் மோடி கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026-இல் 17 நாள்கள் பொது விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு

மும்பையில் சி.என்.ஜி. குழாய் சேதத்தால் கேஸ் விநியோகம் பாதிப்பு!

இரவில் சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் 2026 இல் கூட்டணி ஆட்சி அமையும்: பிரேமலதா விஜயகாந்த்

காதல் சடுகுடு... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT