இந்தியா

ராஜஸ்தானில் தொடங்கியது பருவமழை: மின்னல் பாய்ந்து 4 பேர் பலி!

ராஜஸ்தானில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மின்னல் பாய்ந்து நான்கு பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் காயமடைந்தனர். 

DIN

ராஜஸ்தானில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மின்னல் பாய்ந்து நான்கு பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் காயமடைந்தனர். 

பாலி, பரன் மற்றும் சிட்டோர்கர் மாவட்டங்களில் மின்னல் பாய்ந்து பலியாகியுள்ளனர். பாலி மாவட்டத்தில் ஞாயிறன்று மாலை மின்னல் தாக்கி தினேஷ்(21) உயிரிழந்தார். மேலும், பரன் மாவட்டத்தில் சகோதரர்கள் இருவரான ஹரிராம்(46) மற்றும் கமல்(32) மற்றும் சிட்டோர்கர் மாவட்டத்தில் 10 வயது சிறுமி ஆகிய நால்வர் பலியாகியுள்ளனர். 

மாநிலத்தின் சில பகுதிகளில் பருவமழை ஞாயிறன்று தொடங்கியது. உதய்பூர், கோட்டா, பிகானேர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை முதல் பலத்த மழை பெய்தது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், 

திங்கள்கிழமை காலை வரை அல்வாரின் கதுமார் மற்றும் ராஜ்சமந்த் மாவட்டங்களில் 10 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. ஜுன்ஜுனுவின் சுரஜ்கர் பகுதியில் 8 செ.மீ மழையும், சிட்டோர்கரின் பஹின்ஸ்ரோட்கடிர, சிகாரின் அஜித்கர் மற்றும் கோட்டா, ராம்கஞ்ச், மண்டி ஆகிய மாவட்டங்களிலும் மழைப் பதிவாகியுள்ளது. 

நான்கு பேரும் நிம்பாஹெடாவில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். 

அஜ்மீர், பில்வாரா மற்றும் டோங்க் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT