இந்தியா

பாஜக நாட்டை விற்க நினைக்கிறது: மம்தா பானர்ஜி விமர்சனம்

பாஜக நாட்டை விற்க நினைக்கிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

DIN

பாஜக நாட்டை விற்க நினைக்கிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

மேற்குவங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலையொட்டி மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கூச் பெஹாரில் கூட்டத்தில் பேசினார். 

அப்போது மத்திய பாஜக அரசை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். 'பாஜக நாட்டை விற்க நினைக்கிறது. அவர்களின் இரட்டை என்ஜின்கள் விரைவில் அழிந்து விடும். மாநிலத்தின் பஞ்சாயத்துத் தேர்தலில் முதல் எஞ்சினையும், 2024 மக்களவைத் தேர்தலில் இரண்டாவது எஞ்சினையும் இழக்க நேரிடும்' என்றார். 

மேலும், மக்களவைத் தேர்தலையொட்டி பாஜகவுக்கு எதிராக பெரிய கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அது விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார். 

முன்னதாக, அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றினையும் பொருட்டு பிகார் மாநிலம் பாட்னாவில் கடந்த வெள்ளிக்கிழமை(ஜூன் 23) எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT