முகப்பு
இந்தியா

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 156 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 156 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:12 PM
பகிர்:

மும்பை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 156 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி மிக பிரமாண்டமாக கொண்டாடப்படவுள்ளது. மகாராஷ்டிரம் உள்ளிட்ட வட மாநிலங்களில் 10 நாள்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும்.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்று திரும்புவதற்காக மொத்தம் 156 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாகவும், அதற்கான முன்பதிவு ஜூன் 27 முதல் தொடங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.