இந்தியா

தெலங்கானா தேர்தல்: தில்லியில் காங்கிரஸ் ஆலோசனை

தில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தெலங்கானா காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகிறது. 

DIN

தில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தெலங்கானா காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகிறது. 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்று வருகிறது. 

முன்னதாக தெலங்கானாவில் ஆட்சி செய்துவரும் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இருந்து முன்னாள் எம்.பி பொங்குலேடி ஸ்ரீனிவாஸ் ரெட்டி, முன்னாள் அமைச்சர் ஜூபல்லி கிருஷ்ணராவ் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் என 12 பேர் நேற்று காங்கிரஸில் இணைந்தனர். 

இந்தாண்டு இறுதியில் தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

கர்நாடகத்தைத் தொடர்ந்து தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வியூகம் குறித்து காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT