இந்தியா

டிவிட்டர் ப்ளூ டிக் பயனர்களுக்கு புதிய வசதி

டிவிட்டரில் ப்ளூ டிக் பெற்றிருக்கும் பயனர்கள், இனி 25 ஆயிரம் எழுத்துகளில் தங்களது மிக நீண்ட டிவிட்டர் பதிவுகளை பதிவிடும் வசதி வந்துவிட்டது.

DIN

டிவிட்டரில் ப்ளூ டிக் பெற்றிருக்கும் பயனர்கள், இனி 25 ஆயிரம் எழுத்துகளில் தங்களது மிக நீண்ட டிவிட்டர் பதிவுகளை பதிவிடும் வசதி வந்துவிட்டது.

டிவிட்டரில் ப்ளூ டிக் பெற்றிருக்கும் பயனர்கள் இனி 25000 ஆயிரம் எழுத்துகளில் தங்கு தடையின்றி தங்களது மனதில் நினைப்பதை டிவிட்டர் பதிவுகளாகப் போடலாம் என்ற புதிய வசதியை டிவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிராச்சி போடார் என்ற டிவிட்டர் பொறியாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த புது வசதியை அறிமுகம் செய்தார்.

நாங்கள் நோட் ட்வீட் வரம்பை 10 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயர்த்தியுள்ளோம். மகிழ்ச்சியாக அதிக ட்வீட் செய்யவும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

மேலும் கடந்த பிப்ரவரியில் டிவிட்டர் பதிவுக்கான எழுத்து வரம்பை 4000 மாக உயர்த்தியதும், பின்னர் கடந்த ஏப்ரல் மாதத்தில் 10 ஆயிரமாக அதிகரித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் புதிய வசதி மூலமாக ப்ளூ டிக் பயனர்கள் நீண்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியும். கடந்த டிசம்பரில் 60 நிமிட வீடியோக்களை பதிவேற்றும் புதிய அம்சம் கொண்டுவரப்பட்டது. மேலும் ப்ளூ டிக் அல்லாத சாதாரண டிவிட்டர் பயனர்கள் ஒரு நாளைக்கு அனுப்பக்கூடிய நேரடி செய்திகளின்[டிஎம்] எண்ணிக்கையை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது என அலெக்சாண்டர் பலூசி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாளவிகா மோகனன் பிறந்த நாளில் 3 திரைப்பட போஸ்டர்கள்!

ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியரை திருமணம் செய்ய 3 காரணங்கள்... அடேங்கப்பா!

அழகே.. ஐஸ்வர்யா மேனன்!

கருப்பில் ஜொலிக்கும் வெண்ணிற தேவதை.. ஸ்ருதி ஹாசன்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 27 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT