முகப்பு
இந்தியா

ஹிமாசலில் திருமணத்திற்குச் சென்று திரும்பும்போது நிகழ்ந்த சோகம்: 4 பேர் பலி

ஹிமாசலில் கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். 

Updated On : 28 ஜூன், 2023 at 1:34 PM
கோப்புப்படம்
பகிர்:

ஹிமாசலில் கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். 

இந்த விபத்து ஹிமாசலின் பத்ராஷ்-ரோஹ்ரு சாலையில் நடைபெற்றது. திருமண விழாவில் கலந்துகொண்டு, தேவதிக்கு திரும்பும்போது இந்த விபத்து நடைபெற்றது. பலியானவர்கள் தேவதியை சேர்ந்தவர்கள் ஆவார்.

தீயணைப்பு படையினரின் உதவியுடன் பள்ளத்திலிருந்து உடல்கள் மீட்கப்பட்டதாக துணை ஆய்வாளர் ஜெய்தேவ் கூறினார். 

Advertisement

விபத்தில் இறந்தவர்கள் அவினாஷ் மந்தா(24), சந்தீப்(40), சுமன்(22) மற்றும் ஹிமாணி(22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் ஷிவானி(22) காயமடைந்துள்ளார். 

விபத்து நடைபெற்ற இடத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.