அலுவலகங்களில் ஜீன்ஸ், டி-சர்ட் அணியத் தடை: பிகார் அரசு அதிரடி!
பிகாரில் மாநில கல்வித்துறையின் ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வரும்போது ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து வருவதற்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பிகாரில் மாநில கல்வித்துறையின் ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வரும்போது ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து வருவதற்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பிகார் கல்வித்துறை இயக்குனரகம் கல்வி அலுவகங்களுக்கு வரும் பணியாளர்கள் எளிமையான,வெளிர் நிற உடைகளை அணியுமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
கல்வி நிலையங்களுக்கு ஊழியர்கள் அணிந்து வரும் ஆடைகள் கலாசாரத்திற்கு எதிராக உள்ளது. இது அலுவலக ஒழுக்கத்திற்கு எதிரானது. கல்வி நிலையங்களுக்கு சாதாரண உடையில் மட்டுமே வரவேண்டும்.
பிகார் அரசாங்கம் 2019 ஏப்ரல் மாதம் தலைமை செயலகத்தில் ஜீன்ஸ் மற்றும் டிசர்ட் போன்ற உடைகளுக்கு தடை விதித்தது. மேலும், அதே நேரத்தில் சரண் மாவட்ட ஆட்சியர் அனைத்து அரசு அலுவலக ஊழியர்களும் அரசு அலுவலகங்களில் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் போன்ற உடைகளுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
அலுவலக கலாசாரத்தை பின்பற்றுவதற்காக இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிகார் கல்வித்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.